2025 ஜூலை 05, சனிக்கிழமை

'விளையாட்டு, விரிசல்களை ஏற்படுத்திவிடக் கூடாது'

George   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டு விபரீதமாக மாறி வீரர்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்திவிடக்கூடாது என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

புங்குடுதீவு நசரேத் சனசமூக நிலையமும் நசரேத் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, செவ்வாய்க்கிழமை (30) புங்குடுதீவு நசரேத் மைதானத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், தீவகத்தின் கல்வியானது கடந்த பல வருடங்களாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது தீவகம் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் அபிவிருத்தியிலும் மெல்ல மெல்ல மேலெழுந்து வருவதை அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

தீவகத்தை பொறுத்த வரையில் பல்வேறு தேவைகளும் குறைபாடுகளும் இருக்கின்றது. அவற்றை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

இறுதிப் போட்டியில் புங்குடுதீவு சண்ஸ்டார் அணியும் தம்பாட்டி காந்திஜி அணியும் மோதியதுடன் தம்பாட்டி காந்திஜி அணி வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .