Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நரம்மல விளையாட்டுக் கழகம், பதும் குணதிலகே 100, டில்ஹார லோரன்ஸ் 46, சமல் பெரேரா 36 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் நளின் பண்டிதரத்னே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தனது முதலாவது இனிங்ஸில் விளையாடிய கெஸ்டோ, தமில் நிலங்கவின் 46, சாலிய தென்னக்கோனின் 31 ஓட்டங்களின் துணையோடு, 164 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் உதாரண ஜெயமால் 3, சமல் பெரேரா 2, தனுஷ்க சந்துருவன் 2 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நரம்மல வி.க., 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டிக்கான நேரம் முடிவடைந்தது. இதனடிப்படையில், முதல் இனிங்ஸில் அதிக ஓட்டங்களைப் பெற்றதன் அடிப்படையில், நரம்மல விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவானது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago