Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், முதல்நிலை வீரராக இத்தொடரை ஆரம்பித்த பி. சுரேன், ஷெயான் கருணாரத்னவுக்கெதிரான போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இலகுவான வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தார். 16, 18 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான பெண்கள் பிரிவில், இத்தொடருக்கான முதல்நிலை வீராங்கனையாகவுள்ள மெதிரா சமரசிங்க, 18 வயதுப் பிரிவில் பமொடா ஜெயசேகரவை வீழ்த்தியதோடு, 16 வயதுப் பிரிவில், செனுரியை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் மிக இலகுவாக வீழ்த்தினார்.
ஆண்களுக்கான 18 வயதுப் பிரிவில் இரண்டாம் நிலை வீரர் அனிஷ் விஜேசிங்கவும் வெற்றிபெற்றார். ஆனால், 6ஆம் நிலை வீரரான அமந்த குணசிங்க, இந்துஜன் செல்வரட்ணராஜாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அவிந்திர பெரேரா, விகும் ஜெயசூரிய, சவித் வீரசிங்க ஆகியோரும், பெண்கள் பிரிவில் நெத்மி வடுகேயும் வெற்றிபெற்ற ஏனையோராவர்.
14 வயதுப் பிரிவில் முதல்நிலையிலும் 16 வயதுப் பிரிவில் இரண்டாம் நிலையிலும் தரப்படுத்தப்பட்டுள்ள அனிகா செனவிரத்ன, தனது இரண்டு வயதுப் பிரிவுப் போட்டிகளிலும் மிகச்சிறப்பான வெற்றிகளைப் பெற்றார். 14 வயதுப் பிரிவில் வொனாரா டி அல்விஸ், 16 வயதுப் பிரிவில் செனிதி வீரசேகர ஆகியோரை எதிர்கொண்ட அவர், இரண்டு போட்டிகளிலும் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025