2025 மே 17, சனிக்கிழமை

38ஆவது தேசிய விளையாட்டு போட்டி

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


38ஆவது தேசிய விளையாட்டு போட்டியினை முன்னிட்டு வடமேல் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, புத்தளம் நகர சபை மற்றும், புத்தளம் பிரதேச சபை என்பனவற்றுடன் இணைந்து வடமேல் மாகாண மட்டத்தில் இருபாலருக்குமான சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் நடைப்போட்டி என்பனவற்றினை இன்று சனிக்கிழமை காலை நடத்தியது.

சகல போட்டிகளும் புத்தளம் பஸ் நிலையத்துக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டு அவ்விடத்திலேயே முடிவு பெற்றன. ஆண்களுக்கான நடைப்போட்டி சுமார் 20கிலோ மீற்றரும், பெண்களுக்கான நடைப்போட்டி சுமார் 15 கிலோ மீற்றரும் நடைப்பெற்றன.

இதேவேளை, ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி புத்தளத்திலிருந்து வாரியாபொல நகர் வரை சென்று திரும்பி மீண்டும் புத்தளம் நகரில் ஆரம்பித்த இடம் வரை நடைப்பெற்றது. பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி ஆனமடுவ நகர் வரை சென்று திரும்பி மீண்டும் புத்தளம் நகரில் ஆரம்பித்த இடம்வரை நடைப்பெற்றது.

நடைப்போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம்

ஆண்கள் :-             1. பி.டி.உபுல் மஞ்சிநாயக்க
                                   2. கே.எஸ்.கே.அபேரத்ன
                                   3. ஏ.எம்.கசும் பிரியங்கர அதிகாரி

பெண்கள் :-             . பி.பி.அவந்தி ஜெயசுஹிலா
                                    2. டி.எம்.டி.மதுமிதா டிசாநாயக்க
                                    3. பி.எம்.ஹன்சினி சிறிமாலி பாலசூரிய

சைக்கிள் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம்

ஆண்கள் :-             1. நிபுனால் சிரான்
                                   2. ரொசான் சுமித்
                                   3. சுமித் சந்தன
பெண்கள்:             1. டி.நிரோசினி பெரேரா
                                  2. பி.ஏ.சுதரிக்கா பிரியதர்ஸனி
                                  3. ஏ.எம்.டினேசிக்கா டில்ரானி

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் அசோக வடிவமங்காவ, புத்தளம் தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளரும், புத்தளம் நகர சபை தலைவருமான கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .