2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக் - கண்டி)


கண்டி குருநாகல் பிரதான வீதியில் நேற்று இரவு இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றின்போது ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் பௌத்த தேரர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலில் இருந்து கண்டிக்கு சென்றுகொண்டிருந்த  கார் ஒன்று கண்டி குருநாகல் பிரதான வீதியில் நுகவெல என்னுமிடத்தில் லொரி ஒன்றுடன் மோதியதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது உயிரிழந்தவர் குருநாகல்  வாரியபொலையை சேர்ந்த டீ.எம். திஸாநாயக்க என்பவராவார்.

நேற்று இரவு 9.30 மணி அலவில் இடம் பெற்ற இவ்விபத்து சம்பந்தமாக லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை பொலpஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .