Janu / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலமொன்று திங்கட்கிழமை (22) பகல் மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், அங்குச் சென்ற பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு களப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம், நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின்

46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago