Janu / 2024 மே 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை பிரதேசத்தில், சுற்றாடல் ஆர்வலராக பணியாற்றிய, தற்போது உயிரிழந்துள்ள ஒருவரின் வீட்டில் இருந்து டி 56 ரக துப்பாக்கி, 4 மகசீன்கள், 116 துப்பாக்கி ரவைகள் மற்றும் மோட்டார் ரவையொன்று மீட்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றாடல் செயற்பாட்டாளரின் மகன் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பிலியந்தலை ஹொயன வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டின் இயந்திர அறையில் இருந்து இந்த ஆயுதத் தொகை மீட்கப்பட்டுள்ளது .
குறித்த ஆயுதங்கள் அவ் இடத்திற்கு எவ்வாறு வந்தது , இந்த ஆயுதங்களை யாரேனும் இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்க முடியுமா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago