2021 ஜூன் 21, திங்கட்கிழமை

‘உர இறக்குமதி தடையால் நாட்டில் பஞ்சம் ஏற்படாது’

Freelancer   / 2021 ஜூன் 10 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரோக்கியமான உணவுகள் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான வைத்தியர் அநுருத்த பாதெனிய, இந்த இரசாயன உர இறக்குமதியால் நாடு பஞ்சத்தை எதிர்கொள்ளுமென, பலர் அஞ்சுவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான எந்தவொரு விடயமும் எமது நாட்டில் இடம்பெறாது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (9)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைகையில்,

“உலக ஆய்வின் பிரகாரம் எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் தற்போதைய தலைமுறையை விட குறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கமைய 2025ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் 40-45 வருடத்துக்கு இடையிலேயே காணப்படும்” என்றார்.

2008ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய, இலங்கையில் 20 சதவீதமானவர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் கூட இலங்கையில் வேகமாக அதிகரித்து வருகின்றது என்றார்.

1970ஆம் ஆண்டு பசுமை புரட்சியுடன் இலங்கையில் விஷ உணவுகள் ஆரம்பமானது என்றும் மேற்கத்தையே நாடுகளுக்கு இணைவாக ஆசிய வலய நாடுகளின் குழந்தைகளின் உயிரிழப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த காலங்களில் உணவை விட உடற்பயிற்சி முக்கியமானது என்ற எண்ணப்பாட்டில் மக்கள் இருந்தாலும் அது தற்போது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதுடன், உணவு மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தேவையற்ற உணவு பழக்க வழக்கங்கள் எம்மக்களிடையே தோன்றியுள்ளதுடன், தற்போது நாட்டுக்குள் தவறான உணவு கலாசாரமும் உருவாகியுள்ளது என்றார்.

65 வருடமாக விஷ உணவை உட்கொண்ட மோசமான உணவுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலம் உருவாகியுள்ளதென தெரிவித்த அவர், இரசாயன உர இறக்குமதியை தடை செய்து, சேதன உரத்தை நாட்டுக்குள் பிரபல்யப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும் என்றார்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .