Janu / 2026 ஜனவரி 13 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரணை, கல்ஓயா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் நீண்ட காலமாக பெரிய அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர், ஒரு தொகை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹபரணை, அலுத் ஓயா, சிங்ஹகம மற்றும் ரொட்டவெவ பகுதிகளைச் சேர்ந்த 35, 40 மற்றும் 60 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, ஹபரணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதுசங்க திசாநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சந்தேக நபர்கள் நால்வருடன் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை செவ்வாய்க்கிழமை (13) அன்று ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளன.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026