2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலுக்குள் பலி

R.Tharaniya   / 2025 நவம்பர் 20 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டியிலிருந்து சுழியோடி மூலம் கடல் அட்டை மற்றும் சங்கு சேகரிக்கும் தொழில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வந்த 50 வயதுடைய மொஹமட் ஜெமில் (09 பிள்ளைகளின் தந்தை) என்பவர் புதன்கிழமை (19) அன்று இரவு கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

சக கடற்றொழிலாளர்கள் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்த மொஹமட் ஜெமிலின் ஜனாஸாவை கரைக்கு கொண்டுவரப்பட்ட தாகவும், பின்னர் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலை க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X