2025 மே 08, வியாழக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிய கடல்வாழ் உயிரினமான கடலாமையொன்றை கொன்று இறைச்சியாக்கி தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்  பேரில் மீனவரொருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

பாணந்துறை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வாதுவ உல்லாச விடுதியொன்றை சோதனையிட்டபோது விடுதியின் பின்புறம் பகுதியில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் ஆமை இறைச்சி மற்றும்ஆமை முட்டைகள்  80  மீட்டுள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாதுவ தம்பியகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மீனவர் என தெரியவந்துள்ளது.

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X