2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிறிஸ்மஸ் விருந்தில் மோதல்: 8பேர் காயம்

Mayu   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற விருந்தின் போது இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர்  காயமடைந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொல்கசோவிட்ட அம்பலாங்கொட கமதவத்த வீதி பகுதியில் வசிக்கும் எட்டு பேர் (18-36) காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொட ஹெராலியா, கமதவத்த வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெற்றதுடன், விருந்து இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ​​பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வீட்டினுள் தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் காயமடைந்து வத்தரை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X