2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

’’குஷ்’’ போதைப்பொருளுடன் இருவர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியுடைய ''குஷ்'' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் ''கிரீன் சேனல்'' ஊடாக  வெளியேற முயன்ற இருவர், சுங்கப்போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை  (23) காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஒருவர் கொழும்பைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் எனவும் மற்றவர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களின் பயணப் பையில் இருந்து பொதிசெய்யப்பட்ட 5 கிலோகிராம் 092 கிராம் ''குஷ்'' போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள்   மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

டி.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .