Janu / 2024 டிசெம்பர் 11 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா - எல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சக பணியாளருடன் ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போது சந்தேக நபரான சக பணியாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago