2025 மே 02, வெள்ளிக்கிழமை

கைதிக்கு ஐஸ் கொண்டு சென்ற இருவர் சிக்கினர்

Janu   / 2025 ஜனவரி 01 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப் பொருட்களை கொண்டு சென்ற இருவர் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும், திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்காக  சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த மாம்பழங்களின் விதைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X