2025 நவம்பர் 19, புதன்கிழமை

கொழும்பு சேர் ராசிக் பரீட் முஸ்லீம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம்

Freelancer   / 2025 நவம்பர் 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 15, சேர் ராசிக் பரீட் முஸ்லீம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் அண்மையில் பாடசாலை அதிபர் திருமதி. ஜி. ப்ரீடா கான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக கலாநிதி. எஸ். அதிரதன் (கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்), ரஸீன் அசான் (அமல் சர்வதேச பாடசாலையின் அதிபர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக கே.எஸ்.என். அல்விஸ் (கொழும்பு வடக்கு கே. எஸ். என். அல்விஸ் (கொழும்பு வடக்கு கல்விப் பணிப்பாளர்) மற்றும் விஜேந்திரன் (மக்கள் வங்கியின் முகாமையாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட விருந்தினராக எம்.எம். பெரோஸ் (HR மையத்தின் தவிசாளர்) கலந்து கொண்டார்.

கல்விச் சாதனைகள் மற்றும் இதர செயற்பாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்த மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காகவும் கௌரவிக்கப்பட்டனர். பாடசாலையில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதையில் வழிநடத்துகின்றமைக்காக பாடசாலையின் அதிபரும், முகாமைத்துவ குழுவினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வை வெற்றிகரமாக்குவதில் கடின உழைப்பு மற்றும் பங்களிப்பு செய்த பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் அவர்களின் ஆலோசனைக் குழு, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு பாடசாலை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X