2025 மே 12, திங்கட்கிழமை

கோடரியால் தாக்கிய நபர் மரணம்

R.Tharaniya   / 2025 மே 01 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுனுகம்வெஹேரகாவல் பிரிவின் அக்கர கலகொட பகுதியில் புதன்கிழமை (30) அன்று 67 வயதுடைய நபர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக லுனுகம்வெஹேர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒரு டாக்ஸி வண்டி  மீது மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிள்ஓட்டுநர் கீழே விழுந்த பிறகு, டாக்ஸி ஓட்டுநர் காயமடைந்த நபரை அணுகி, கோடரியால் தாக்கி,பின்னர் காரில் தப்பிச் சென்றார்.

படுகாயமடைந்தமோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லுனுகம்வெஹேர பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சந்தேகநபரும் அவரது வாகனமும் பொலிஸாரால்கைது செய்யப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை லுனுகம்வெஹேர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X