Janu / 2026 மார்ச் 23 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக 27 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இலங்கை பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் திங்கட்கிழமை (23) காலை துபாயில் இருந்து 'ப்ளை துபாய்' (Fly Dubai) நிறுவனத்திற்கு சொந்தமான FZ-579 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயண பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மென்செஸ்டர்" (Manchester) வகை 18,000 சிகரெட்டுகள் அடங்கிய 90 கார்ட்டூன் அட்டை பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டி.கே.ஜி.கபில

7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago