Janu / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் சங்குகளை சட்டவிரோதமான முறையில் பிடித்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினரால் கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கற்பிட்டி, இப்பந்தீவு கடற்பகுதியில் இருந்துள்ளது.
அதனை சோதனையிட்ட போது சட்டவிரோதமான முறையில் சங்குகளை பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 1856 சங்குகள் மற்றும் டிங்கி இயந்திர படகொன்று மீடகப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவருடன் கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின்

42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago