Editorial / 2023 ஜூலை 06 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ புதன்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago