2025 மே 02, வெள்ளிக்கிழமை

டொலமைட் தொகையுடன் பயணித்த லொறி விபத்து

Janu   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை பிரதேசத்தில் இருந்து எல்பிட்டிய நோக்கி டொலமைட் தொகையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போதே குறித்த லொறியில் டொலமைட் இருந்தமை  பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. லொறி சரிவில் கவிழ்ந்த போது 50 கிலோ எடையுள்ள 600 டொலமைட் மூடைகள் இருந்ததாகவும், விபத்தின் போது லொறி 3 தடவைகள் உருண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக லொறி சாரதியிடம் விசாரணை நடத்திய போது, ​​மூன்று நாட்களாக சரியாக தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X