Editorial / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பட்டம் விட்டுக்கொண்டிருந்த நூலில் மின்சாரம் பாய்ந்ததில், 13வயதான சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், புத்தளத்தில் உள்ள தலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கூட்டுறவு சங்க கட்டிடத்தின், மொட்டை மாடியில் இருந்து குறித்த சிறுவன் ஞாயிற்றுகிழமை(27) பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் போது பட்டத்தின் நூல் மின்சார கம்பியில் சிக்கியுள்ளது. அதனை எடுக்க முற்ப்பட்ட போதே அச்சிறுவன் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அச்சிறுவனை மீட்டுபுத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
37 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
40 minute ago