2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பன்றி இறைச்சியுடன் உணவக உரிமையாளர் கைது

Janu   / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - சேத்தபொல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் காட்டு பன்றி இறைச்சியுடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி - செம்பட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உணவகத்தில் மது அருந்த வருபவர்களுக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் இறைச்சியை கறியாக தயாரித்து வருகின்றனர் என வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த உணவகத்தில் உள்ள  குளிர்சாதனப் பெட்டியில் இருந்து காட்டுப் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X