Janu / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக எடுத்துச் செல்வதற்காக போக்குவரத்திற்கு தயார் செய்யப்பட்ட இலைகள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் கற்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனையிடப்பட்டதுடன்
அங்கு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தப்பட்ட 840 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் கெப் வண்டி ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கற்பிட்டி ரெட்பானா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதருக்குள் ஏழு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பது சவர்க்காரக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கெப் வண்டி, பீடி இலைத் தொகுதி மற்றும் சவர்க்காரக் கட்டிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
எம்.யூ.எம்.சனூன்


4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago