Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கைவினைக் கலைத்திறனை இலங்கையின் பாரம்பரியத்துடன் இணைக்கின்ற ஒரு பல்துறை கலாச்சார இராஜதந்திர செயற்திட்டமான SEVA ன் ஆரம்பமானது, இலங்கையின் படைப்பாற்றல் மற்றும் கைவினைத்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தைக் குறித்து நிற்கின்றது. அதன் கலைத்திறன் மகத்துவத்திற்கு அப்பால், உயர் மதிப்பு மிக்க ஏற்றுமதித் துறையாக வளர்ச்சி காணும் வாய்ப்பினைக் கொண்டுள்ள மற்றும் புதிய முதலீடுகளை ஈர்க்க வல்ல ஒரு துறையாகக் காணப்படுகின்ற இலங்கையின் கைவினைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வாய்ப்புக்களை SEVA காண்பிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இணைப்பொருத்தம் நிகழ்ச்சித்திட்டத்தின் (EU-Sri Lanka Matchmaking Programme) ஒரு அங்கமாக இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளதுடன், அறிவுப் பங்காளர்களானUniversity of the Arts London (UAL)மற்றும்British Council, மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் தலைமையாளராகThe Institute of Future Creations (TIFC)ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியம் (European Union to Sri Lanka and the Maldives),மற்றும்Cultural Relations Platform (CRP) ஆகியவற்றின் துணையுடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் (Sri Lanka Export Development Board - EDB) இது முன்னெடுக்கப்படுகின்றது.இலங்கையிலுள்ள இத்தாலிய தூதரகத்தின் ஆதரவையும்SEVAபெற்றுள்ளது.
இத்தாலிய காணல் கலைத்துறை கலைஞரான கேத்தரினா ரோப்போ அவர்களின் தலைமையில், நலிவுற்ற கைவினைக் கலைஞர்கள் மீது கவனம் செலுத்தியவாறு, கலை, உள ஆரோக்கியம், மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னரான எழுதிறன் ஆகியவற்றின் ஒன்றிணைப்பை SEVA ஆராய்கிறது. இந்த ஆண்டின் முற்பகுதியில், இலங்கையில் மிகவும் புகழ்பூத்த புடைவை கலைஞர்களில் ஒருவரான சொனாலி தர்மவர்த்தன அவர்களுடன் தங்கி, பணியாற்றியுள்ள ரோப்போ அவர்கள் சமகால கலை நடைமுறையை, எமது நாட்டின் புடைவைப் பாரம்பரியத்துடன் ஒன்றிக்கச் செய்வதற்கு உழைத்துள்ளார்.
2025 ஜுலையில் இத்தாலிய Terrae சர்வதேச திரைப்பட விழாவில் குறும் ஆவணப்படமொன்றை SEVA திரையிட்டிருந்ததுடன், சர்வதேச திரைப்பட நிகழ்வொன்றில் இந்த வகையில் இலங்கை பத்திக் (batik) மற்றும் புடவை கைவினை வேலைப்பாடு காண்பிக்கப்பட்ட முதல் நிகழ்வாகவும் மாறியது. திரைப்படத்தின் மூலமாக சர்வதேச அரங்கில் இலங்கையின் பத்திக் குறித்து முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதிய நேயர் தரப்பினரை எட்டி, இந்த கலையை சர்வதேச மேடைக்குக் கொண்டு செல்வதற்கு வழிகோலியுள்ளது. இது கலாச்சார அனுபவம் மற்றும் விழிப்புணர்வு என்பதற்கும் அப்பாற்பட்டது. உயர் மதிப்பு மிக்க ஏற்றுமதிச் சந்தைகளில் இலங்கையின் கைவினைத் துறையை நிலைநிறுத்துவதில் இது மற்றுமொரு மூலோபாயரீதியாக முன்னோக்கிய படியாக அமைந்துள்ளது.
சர்வதேச அரங்கில் இலங்கையின் பத்திக் மற்றும் புடவை கலைநயத்தை சிறப்பாகக் காண்பித்து, அதற்கான அங்கீகாரத்தை மேலும் ஆணித்தரமாக்கும் முயற்சியாக ஆர்ஜென்டினா, பியூனஸ் அயர்ஸ், III Salón de Videoarte Textil நிகழ்விலும் காட்சிப்படுத்துவதற்காக SEVA ஆவணப்படம் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச படைப்பாக்க பொருளாதாரத்தில் மகிழ்வளிக்கும் ஸ்தானம்
சர்வதேசரீதியாக, கைவினைப் பொருட்கள் மற்றும் புடவைகள் உயர் ரக கலாச்சாரச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படும் போக்கு அதிகரித்து வருவதுடன், சந்தையில் வலுவான கேள்வியையும் கொண்டுள்ளன. இந்தியாவின் ஆடை மற்றும் புடவைத் தொழில்துறையின் மதிப்பு 2024ம் ஆண்டில் 222 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2030ம் ஆண்டளவில் இது 350 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. பாரம்பரிய திறன்களை, வடிவமைப்பு புத்தாக்கம், வர்த்தகநாம பிரபலப்படுத்தல், மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலமாக முன்னெப்போதும் கண்டிராத ஏற்றுமதி வளர்ச்சி எந்தளவு தூரம் சாத்தியம் என்பதை இது நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. Christian Dior, Gucci, மற்றும் ஏனைய ஆடம்பர வர்த்தகநாமங்களுடன் Chanakya School of Craft ன் ஒத்துழைப்பு போன்ற கூட்டாண்மைகள் பாரம்பரிய சித்திரத்தையல் மற்றும் நெசவு வேலைப்பாடுகளை சர்வதேச நவநாகரிக வார (fashion week) நிகழ்வுகளின் பேசுபொருளாக மாற்றியுள்ளன.
இலங்கையும் அதேபோன்ற திருப்புமுனையொன்றில் தற்போது நிலைபெற்றுள்ளது. பத்திக் மற்றும் கைத்தறி, சரிகை வேலைப்பாடு, மர வேலைப்பாடு, மற்றும் உலோக வேலைப்பாடு என பல்வகைப்பட்ட செழிப்பான கைவேலைப்பாடுகளுடன் 700 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட மதிப்பைக் கொண்ட சர்வதேச படைப்பாக்க பொருளாதாரத்தில் போட்டியிடும் கலாச்சார ஆழத்தை அது கொண்டுள்ள போதிலும், தனது பரிமாண ஆற்றலை இன்னமும் முழுமையாக அடையப்பெறவில்லை. கைவினை நீரோட்டத்தை ஆடம்பர மற்றும் உயர் ரக சந்தைப் பிரிவுகளுக்கு நகர்த்துவதன் மூலமாக, ஏற்றுமதி வருவாயை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு நாட்டிற்கு வாய்ப்புக் கிட்டும் அதேசமயம், கிராமப் புறங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்,யுவதிகளுக்கு தொழிற்திறன் கொண்ட வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கும்.
“இச்செயற்திட்டமானது நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவது தொடர்பானது,” என்று EU/EDB நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்திட்ட தலைமை அதிகாரியும், TIFC ன் இணை ஸ்தாபகருமான றொபேர்ட் மீடர் அவர்கள் குறிப்பிட்டார். “நிலைபேறான வர்த்தகத்திற்கான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பி, வணிக ரீதியான சாத்தியங்களுடன் உலகத்தரம் வாய்ந்த, சமூக ஈடுபாடு கொண்ட பணிகளை வழங்கும் ஆற்றலை இலங்கையின் படைப்பாக்கத் துறை கொண்டுள்ளது என்பதை SEVA நிரூபிக்கின்றது.”
இதன் அனுபவம் குறித்து கேத்தரினா ரோப்போ அவர்கள் பிரதிபலிக்கையில்: “பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து என்பது மன வலிமை மற்றும் புதுப்பித்த மலர்ச்சி ஆகியவற்றிற்கான ஒரு மூலமாக மாறுவதற்கான களத்தை உருவாக்குவதே SEVA ஆகும். இலங்கையில் நான் தங்கியிருந்த காலப்பகுதியானது கைவினைக்கலையின் பரிமாற்றம் மாத்திரமன்றி, பாரம்பரியம் மற்றும் படைப்பாக்கம் எவ்வாறு சந்தை வாய்ப்புக்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, கைவினைத் துறை கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளம் காண்பதை உறுதி செய்யும் வழிமுறைகளை ஆராயவும் உதவியுள்ளது.”
“இலங்கையின் கைவினைத் துறை எப்போதும் மிகச் சிறந்த திறமைசாலிகளைக் கொண்டுள்ளது,” என்று UAL சர்வதேச மேம்பாட்டு முகாமையாளரான ஹன்னா மிடில்டன் அவர்கள் குறிப்பிட்டார். “அர்த்தமுள்ள சமூக மற்றும் கலாச்சார விளைவுகளைத் தோற்றுவிக்கும் அதேசமயம், வணிகரீதியில் நீண்ட கால வெற்றிக்கு சர்வதேச தெரிநிலையை கட்டியெழுப்புவதற்கு எமது நிகழ்ச்சித்திட்டங்கள் எவ்வாறு ஆதரவளிக்கின்றன என்பதை SEVA எடுத்துக்காட்டுகின்றது.”
“கேத்தரினா அவர்களுடன் இணைந்து பணியாற்றியமை பரஸ்பர அறிவை வளர்க்கும் ஒரு பயணமாக அமைந்தது,” என்று சொனாலி தர்மவர்த்தன அவர்கள் குறிப்பிட்டார். “ஒத்துழைப்புக்கள் எவ்வாறு உள்நாட்டு கைவினைத் திறனை கௌரவிக்கின்றன என்பதை SEVA காண்பித்துள்ள அதேசமயம், வெளிப்படுத்தல், அங்கீகாரம், மற்றும் வர்த்தக வழிமுறைகளுக்கான புதிய வடிவங்களுக்கும் வழிகோலியுள்ளது. அசல், உயர் தர கைவினைப் பொருட்களுக்கான கேள்வி சர்வதேச சந்தையில் ஆண்டு தோறும் வளர்ச்சி கண்டு வருவதுடன், இத்தகைய செயற்திட்டங்கள் அத்தகைய கேள்வியை உதவிகள் மிகவும் தேவைப்படுகின்ற சமூகங்களுடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்துகின்றன. உயர் தர சந்தை வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதன் மூலமாக, நிலைபேறான வருமான வளர்ச்சிக்கு நாம் உந்துசக்தியளித்து, பாரம்பரிய திறன்களைக் கட்டிக்காத்து, மற்றும் கிராமப்புறங்களிலுள்ள பெண்கள், மற்றும் இளைஞர்,யுவதிகள் நடைமுறைச் சாத்தியமான மற்றும் வெகுமதியளிக்கும் தொழிலாக கைவினைக் கலையைக் கண்டுகொள்வதற்கு வலுவூட்டுகின்றோம்.”
இந்த ஆண்டின் முற்பகுதியில் கொழும்பிலுள்ள இத்தாலிய தூதரகம் கேத்தரினா அவர்களை வரவேற்றிருந்ததுடன், இராஜதந்திரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் புடவைக் கலைகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டி, கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்த செய்தி மிகத் தெளிவானது. குறித்த இலக்கைக் கொண்ட வடிவமைப்பு கூட்டாண்மைகள், சந்தை ஸ்தானத்தை நிலைநிறுத்தல், மற்றும் படைப்பாக்க ஆற்றலில் முதலீடு ஆகியவற்றுடன், உலகளாவில் முன்னிலை வகிக்கும் நாடுகளை இலங்கையின் கைவினைத் துறையும் பின்பற்ற முடியும் என்பதுடன், வேலைவாய்ப்புக்களைத் தோற்றுவித்து, ஏற்றுமதிகளை முன்னெடுத்து, மற்றும் உலகின் மிகவும் வலுவான கலாச்சார மற்றும் வர்த்தகச் சந்தைகளில் தனது ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago