Janu / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம்-தெற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட கொத்தான்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆறாம் தரத்துக்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கான நிகழ்வு திங்கட்கிழமை (19) மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் .
மேலும் புதிதாக இணைந்த ஆறாம் தர மாணவர்கள் மலர் செண்டுகள் வழங்கி வரவேற்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவர்களுக்கான வகுப்பறை கட்டட தொகுதியையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எம்.யூ.எம்.சனூன்

50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago