2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பெண்ணை கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை  கைது செய்யப்பட்டதாக  மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தெடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கட்டுனேரிய - லான்சிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24ஆம் திகதி இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவியை சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை விடுவிக்க  பணம் வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் தன்னிடம் கூறியதாகவும்  மாரவில பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸாரால், கொச்சிக்கடை - தலுவாகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில்  கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மீட்டுள்ளதுடன் பெண்ணைக் கடத்தியதாக சந்தேகப்படும் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.

இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட குறித்த பெண், 08 பேரிடம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதுவே அந்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் திங்கட்கிழமை (25) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X