2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

மாத்திரா...

Janu   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரியம் நாகரிகத்துடன் சங்கமிக்கும், இளம் கலைஞர்களின் அழகிய அசைவுகளால் கலாச்சாரம் உயிர்ப்புடன் மிளிரும் ஒரு மந்திரமான உலகிற்குள் நுழையுங்கள்.

மாத்திரா 14 என்பது ஒரு சாதாரண கலாச்சார நிகழ்ச்சி மட்டுமல்ல இது இலங்கையின் வளமான கலை மரபை உயிர்ப்பிக்கும் ஒரு அற்புதமான அஞ்சலி. இது ஆர்வம், துல்லியம், நோக்கம் ஆகியவற்றின் இணைப்பாக உருவானது.

லைசியம் சர்வதேச பாடசாலையின் நிறுவனர் டாக்டர் மோகன் லால் கிரேரோ அவர்களின் சிந்தனையில் உருவாகி, லைசியம் சர்வதேச பாடசாலைகளின் ஒருங்கிணைப்புப் பிரதானாசிரியர் டாக்டர்  குமாரி கிரேரோவின் மேற்பார்வவையின் தலைமையில் வளர்ந்தது. மாத்திரா இலங்கையின் மிகப்பெரிய பாடசாலை மட்டத்திலான கலாச்சார நடன விழாவாக மலர்ந்துள்ளது.

இந் நிகழ்வு 2025 அக்டோபர் 11 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)  நடைபெறவுள்ளது. இரு அற்புதமான நிகழ்ச்சிகள் மேடையில் ஒளிரும்

முதல் நிகழ்வு – மாலை 4.02 மணி

இரண்டாம் நிகழ்வு  – மாலை 6.58 மணி

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .