R.Tharaniya / 2025 ஜூன் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு மாரி ஸ்டெல்லா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்வு "Maris Panorama - 2025" என்ற கருப்பொருளின் கீழ்,வெள்ளிக்கிழமை (06) அன்று மாலை நீர் கொழும்பு கிராண்டீசா ஹோட்டலின் பிரதான மண்டபத்தில் நிகழ்ந்தது இதில் "பாரம்பரியத்திலிருந்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பாதை வகுத்து இலங்கையை மாற்றுதல்" என்ற கருப்பொருளின் கீழ் சிறப்பு சொற்பொழிவு மற்றும் குழு விவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முக்கிய உரையை டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய நிகழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற குழு விவாதத்தில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, மூத்தகொள்கை ஆய்வாளர் பேராசிரியர் ரோஹன் சமரஜீவ, ஹட்டன்நஷனல் வங்கியின் உபதலைவர் சஞ்சய் விஜேமான்ன, ஒமேகாலைனின் நிர்வாக இயக்குநர் பெலிக்ஸ் பெர்னாண்டோ, சுதந்திரவர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலை டெய்லி எஃப்டியின் தலைமை ஆசிரியர் நிஷார் காசிம் நெறிப்படுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அதன் முக்கிய கூறுகள், டிஜிட்டல்மயமாக்கலின் சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது, டிஜிட்டல்பொருளாதாரம் மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறு உதவும், டிஜிட்டல்பொருளாதாரச் சட்டம் ஆகிய கருப்பொருள்களின் கீழ் இவ் கலந்துரையாடல் நடைபெற்றது.
டி.கே.ஜி. கபிலா



7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago