Janu / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், கும்புக்கெடே - பன்னெக்கம நெலவ வீதியில் ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நெரியாவ, கும்புக்கெடே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
பன்னெக்கமவிலிருந்து நெலவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த நால்வரும் மேலும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago