Nirosh / 2022 ஜனவரி 26 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 10ஆம் கட்டை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (26) அதிகாலை 3.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பணம், பால் மா பெட்டிகள், கிறீம்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் என சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையில் கொள்ளையிட வருகை தந்த கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு, ஆள் அடையாளம் தெரியாதவாறு உடையணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை சீ.சீ.ரி.வி பாதுகாப்பு கமராவில் பதிவான காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago