Editorial / 2026 மார்ச் 16 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம் அண்மையில் மாணவர் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவிலும் (O/L), 1992ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவிலும் (A/L) கல்வி பயின்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை முழுமையாக முன்னெடுத்திருந்தனர். அத்துடன், மாணவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் 100 பகவத்கீதை நூல்களும் இதன்போது பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
நிகழ்வின் சிறப்பம்சமாக கல்லூரியின் அதிபர் மூ. மூவேந்தன், கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரும், தற்போதைய வரி ஆலோசகருமான பாலசுந்தரம் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர்
நூற்றாண்டு காணும் விவேகானந்தா கல்லூரிக்கு இந்த நவீன நூலகம் ஒரு புதிய மகுடமாக அமைந்துள்ளதுடன், பழைய மாணவர்களின் இச்செயற்பாடு தற்போதைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





13 minute ago
24 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
39 minute ago
54 minute ago