R.Tharaniya / 2025 மே 18 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இலங்கை விமானப் பயணி ஒருவர், சனிக்கிழமை (17)அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கண்டியின் கம்பளை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
அவர் சிகரெட்டுகளை டுபாயிலிருந்து வாங்கி, பஹ்ரைனுக்கு சென்று, அங்கிருந்து சனிக்கிழமை (17) அன்று காலை 09.30 மணிக்கு கல்ஃப் ஏர் விமானம் GF-144 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
50,000 வெளிநாட்டுத் உற்பத்தி "பிளாட்டினம் டபுள் மிக்ஸ்" சிகரெட்டுகள் அடங்கிய 250 சிகரெட் அட்டைப் பெட்டிகள் எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து, இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


டி.கே.ஜி. கபில
19 minute ago
40 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
46 minute ago
51 minute ago