Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூலை 01 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் நம்பிக்கையை வென்ற நாமமான சூர்யாவின் அனுசரணையுடன் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும். New Generations Sri Lanka வினால் ஒழுங்கமைக்கப்பட்ட Youth Top 40 Awards 2025 விருது வழங்கல் நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்திற்கான விருதுகளுக்குரிய மதிப்புகளையுடைய அசாத்திய திறமைகளைக் கொண்ட எட்டு மாகாணங்களை சேர்ந்த இளைஞர்கள் விருதுகளைத் தமதாக்கி நாட்டின் ஏனைய இளைஞர்களுக்கு முன்னோடிகளாகினர்.
மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் களனி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இளங்கலைப் பட்டதாரியான ரனோஜா ரன்சரினி திக்ஓவிட்ட, சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்துடனான ஈரநில கண்காணிப்பாளர்கள் மற்றும் உயிரியல் மறுசீரமைப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக நிலையான தலைமைத்துவத்திற்கான மிகச் சிறந்த இளங்கலைப் பட்டதாரி (பெண்) விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
சப்ரகமுவ மாகாணத்தின் FONIX Software Solutions நிறுவனத்தின் நிறுவனர் திலங்க சஞ்சய, தனது இரு மொழி செயலியான Exam HUB மற்றும் AI தளமான FEDES மூலம் டிஜிட்டல் கல்வியை மாற்றியமைப்பதற்கான முயற்சிக்காக ஆண்டின் இளையோர் தொழில்நுட்ப தொழில்முனைவோர் விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்துறை தொழில்நுட்பத்தில் கலாநிதி கற்கைப் பெறும் தென் மாகாணத்தைச் சேர்ந்த சத்துர மதுசங்க, நிலையான Bio fabrication and ventures Raindrop Designs and SINC Agriculture தொடர்பான தனது புத்தாக்கங்களுக்காக இளம் முன்னோடிகளுக்கான விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
வடமேற்கு மாகாணத்தின் பராக்கிரமபாகு தேசிய பாடசாலையின் மாணவர் தலைவரான பி.டி. மஹீஷ கிம்ஹான் ஜயசூரிய, சிறந்த பாடசாலை தலைமைத்துவத்திற்கான விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவரும், தேசிய டென்னிஸ் சாம்பியனுமான ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சனித் மின்தக டி சில்வா, விளையாட்டிலும், சமூகப் பரப்புரையிலும் சிறந்து விளங்கியமைக்காக ஆண்டின் வளர்ந்து வரும் இளம் தலைவர் விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
மத்திய மாகாணத்தின் வித்தியார்த்த கல்லூரி மாணவரான ஜனங்க தம்சித் தர்மரத்ன, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் மாணவர் தலைமைத்துவம் ஆகியவற்றில் தனது சாதனைகளுக்கான விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
வட மாகாணத்தின் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கற்ற மதுரா அருந்தவம், உணவு மற்றும் இரசாயனவியலில் தேசிய மற்றும் சர்வதேச பாராட்டைப் பெற்ற சுண்ணாம்பு இல்லாத கள் சேகரிப்பு முறை புத்தாக்கத்திற்காக வளர்ந்து வரும் புத்தாக்குநர் விருதையும், சூர்யாவின் மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார்.
அனுராதபுரம் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவியும், பெண்களின் சுகாதார நலன்களை கருத்திற்கொண்டு இலாப நோக்கற்று செயற்படும் நிறுவனமான சஹேலி ஸ்ரீ லங்காவின் நிறுவனருமான வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனுதி குணசேகர, ஆண்டின் உத்வேகம் தரும் இளையோருக்கான விருதையும், சூர்யாவின் வடமத்திய மாகாண வெற்றியாளர் விருதையும் பெற்றார். இவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72 வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
“இளைஞர்களே இலங்கையின் எதிர்காலம். ஆரம்பத்திலிருந்தே இந்தப் புதிய தலைமுறைக்கான விருதுகளை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இந்த ஆண்டு எமது இளம் தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் காணக் கிடைத்தது உண்மையிலேயே உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது. வெறுமனே தனது சந்தைப் பிரிவில் ஒரு தலைவராக மட்டுமே இருந்து வராது, இளைஞர் வலுவூட்டல், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ அங்கீகாரம் என்பவற்றினூடாக நாட்டின் முன்னேற்றத்தில் ஆழமாக முதலீடு செய்யும் சமூக உணர்வுள்ள வர்த்தக நாமமாக இருப்பது சூர்யாவின் பரந்த பார்வையைப் பிரதிபலிக்கிறது” என சன் மேட்ச் நிறுவனத்தின் இயக்குநர் கௌரி ராஜன் குறிப்பிட்டார்.
New Generations Sri Lanka இன் நிறுவனர் டாக்டர் சுலோச்சனா சிகேரா கூறுகையில், “இந்த விருதுகள் பாராட்டுகளை விடவும் மேலானது. அவை பண்பு, இரக்கம் மற்றும் தைரியம் என்பவற்றை கௌரவிக்கின்றன. இலங்கையின் விழுமியங்களில் வேரூன்றி இருந்தாலும், உலகளவில் வழிநடத்தத் தயாராக இருக்கும் இளைஞர்களைக் கொண்டாடுவதே எங்கள் நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025