Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2015 மார்ச் 08 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஐ.நேசமணி
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயரும் யாழ். பல்கலைக்கழக தமிழ் முதுமாணிக் கற்கைநெறி வருகை விரிவுரையாளருமாகிய அதிவண. கலாநிதி எஸ்.ஜெபநேசனின் மணிவிழா எதிர்வரும் புதன்கிழமை (11) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். சென்;ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருட்தந்தையும் விழா நாயகரின் சகோதரருமாகிய வண.எஸ்.மனோபவன் தலைமையில் நடைபெறும்; வழிபாட்டு நிகழ்வுகளில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. இராயப்பு யோசப் ஆண்டகை அருளுரை வழங்குவார்.
இதன்போது, உடுவில் மகளிர் கல்லூரியினரின் வழிபாட்டுப் பாடல்களைத்தொடர்ந்து, கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் துணை அதிபர் ச.லலீசனின் முன்னிலைப்படுத்தலில் பகிரங்கக் கூட்டம் இடம்பெறும். இந்நிகழ்வில் ஆசியுரைகளை நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் இலங்கைத் திருச்சபையின் நுவரேலியா மறைமாவட்டக் குரு முதல்வர் வண. எஸ்.பி.நேசகுமாரும் வழங்குவர்.
பவளவிழாவையொட்டி பேராயரால் எழுதப்பட்ட கண்டதும் கேட்டதும் என்ற நூலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வெளியிட்டு வைப்பார். பேராயரின் அபிமானிகளையும் மாணவர்களையும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
21 minute ago
1 hours ago