Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விவேகாவின் நல்வழி இதழ் வெளியீடும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் ஐதர் அலி பிரதம அதிதியாகவும் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் பிரபு பிரபானந்தாஜி மகராஜ்,சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,கல்லடி,உப்போடை பேச்சியம்மன் சித்திவிநாயர் ஆலய முகாமையாளர் ஹரிதாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் பிரபு பிரபானந்தாஜி மகராஜு நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை,தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .