2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இறுவட்டு வெளியீட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாகரை புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப் சிபில்ராஜின் ' என் ஜெபம் வீணாகாது ' எனும் கிறிஸ்தவ  பாடல்கள் அடங்கிய  இசை இறுவட்டு வெளியீட்டு விழாவும் கௌரவிப்பு  நிகழ்வும் அருட்தந்தை எம்.ஸ்ரனில்லோஸ் தலைமையில் மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய முன்றலில்  நேற்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர்  எ .தேவதாசன், சிறப்பு விருந்தினர்களாக யேசு சபை துறவி அருட்பணி போல் சற்குண நாயகம், சிறிய குருமட அதிபர்  அருட்பணி  மொறாயஸ், மறை மாவட்ட ஆயர் இல்ல நிதிப் பொறுப்பாளர் அருட்பணி இஞ்ஞாசி ஜோசப் மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

விசேட தேவையுடையவராக வாழ்ந்து வரும் மட்டக்களப்பு  வாகரை பிரதேசத்தின் புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப் சிபில்ராஜ் கடந்த 2004ஆம் ஆண்டு  ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து பாதிப்புக்குள்ளான  இவர்  தனது வாழ்க்கை அனுபவத்தை எடுத்துரைக்கும் வகையில், அருட்தந்தை ஜேசுதாசன்  அடிகளாரின் உதவியுடன் ' என் ஜெபம் வீணாகாது ' எனும் கிறிஸ்தவ பாடல்கள்  இயற்றி  இறுவட்டாக  வெளியிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .