Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்துள்ள 'கலை இலக்கிய திருவிழா' எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவரான பேராசிரியர் துரைமனோகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலக்கிய இமயம் ஜெயகாந்தன் பற்றி, சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன் தொடர்ந்து எழுதிய 'ஞான பீடத்தைக் கண்டேன்'... எனும் நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறும். இதன்போது, நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்.
இதேவேளை, பேராசிரியர் சபா.ஜெயராஜா சிறப்புரையையும் கலைக்கேசரி ஆசிரியரும் மூத்த பெண் படைப்பாளியமான அன்னலட்சுமி இராஜதுரை நயவுரையையும் கொழுந்து அந்தனி ஜீவா வரவேற்புரையையும் ஊடகவியலாளர்
எஸ்.பொன்னுத்துரை நன்றியுரையையும் நிகழ்த்துவர்.
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வாங்க பழகலாம்' புகழ் நகைச்சவை நடிகர்களான விஜய், ரவிகுமார் ஆகியோரின் நகைச்சுவையும் இதன்போது இடம்பெறும்.
மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எஸ்.சண்முகராஜா, மூத்த பெண் படைப்பாளி பத்மா சோமகாந்தன், சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன், சுடர்ஒளி பிரதம ஆசிரியர் பதிமசீலன், நடன இயக்குனர் மல்லிகா கீர்த்தி, இலக்கிய ஆர்வலர் ரகுபதி பாலஸ்ரீதரன், முன்னாள் கல்வி அதிகாரி ஜி.போல் அன்டனி, ஊடகவியாலாளர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், பட்டிமன்றம் புகழ் ஆர்.வைத்தமாநிதி, வானொலி கலைஞர் கே.சந்திரசேகரன், தொலைக்காட்சி புகழ் ராஜா கணேஷன், பாடகர் உபைதுல்லா மஹ்தூம், ஒளிப்பதிவாளர் எம்.ஐ.எம்.ஹூசைன், வானொலி நடிகர் இர்ஷாத் ஒமர்தீன் மற்றும் ஒப்பனைக் கலைஞர் கே.ரத்னலிங்கம் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
41 minute ago
2 hours ago
4 hours ago
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
4 hours ago
29 Aug 2025