2025 மே 02, வெள்ளிக்கிழமை

கவிதை போட்டி

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அமைச்சர் கபீர் காசிமின் தந்தையாரான மர்ஹூம் பரிஸ்டர் ஏ.எல்.எம்.ஹாஸிமின்;  ஏழாவது சிறார்த்த தினத்தை முன்னிட்டு பரிஸ்டர் ஹாஸிம் பவுண்டேசனின் ஏற்பாட்டில் கவிதைப் போட்டிகளை நடத்தவுள்ளதாக பவுண்டேசனின் செயலாளர் எம்.ரி.அப்துல் கபுர் தெரிவித்தார்.

இதுதொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு,  பரிஸ்டர் ஹாஸிம் பவுண்டேசன் அலுவலகத்தில் இன்று(08) நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர்,

'மர்ஹூம் ஹாஸிம் சிறந்த கல்விமானாக மட்டுமல்லாது சமூக சேவையாளராகவும் நற்பண்புள்ளவராகவும் வாழ்ந்தவர். அவரது, வாழ்க்கையின் முக்கிய தடயங்களையும் அன்னாரின் சமூக சேவைகளையும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ளும் வகையிலும்; வெளி உலகுக்கு கொண்டுவருவதற்காகவும் கவிதை போட்டியை நடத்தவுள்ளோம்.
கவிதைப் போட்டிகளை நடத்தி, அதன்மூலம் கவிதைத் தொகுப்பை வெளியிடவுள்ளோம்.

மேலும் வாசிப்பு, கவிதை, இலக்கியதுறைகளில் ஆர்வம் குறைந்துவரும் இக்காலக் கட்டத்தில் அதனை ஆர்வப்படுத்தி, ஊக்கமளிப்பதும் இதன் நோக்கமாகவுள்ளது.

இந்த கவிதைப் போட்டிகளில் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள முடியும். ஆயிரம் போட்டியாளர்களின் கவிதைத் தொகுப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டு அவைகள், ஒரு கவிதைத் தொகுப்பு நூலாக அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதலாம் பரிசாக 50,000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 30,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதுடன் ஏழு பேருக்கு தலா ரூபாய் 5,000 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
 
இந்நிகழ்வில் பரிஸ்டர் பவுண்டேசனின் உபதலைவர் எஸ்.எம்.அலாவுதீன் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .