2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கவியரங்கு

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கலை இலக்கிய மன்றம் நடத்தும் கவியரங்கு, எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு கிண்ணியா கட்டையாறு சிறுவர் பூங்காவில் இடம்பெறவுள்ளது.

கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் எ்ச.எம்.ஹலால்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள
இக் கவியரங்கில் கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம், மூதூர், குச்சவெளி,  நிலாவெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து பிரபல்யமாண கவிஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கவியரங்கில் கவிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்படும் கவிதைகளில் தெரிவு செய்யப்படும் 3 கவிதைகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.

இதே வேளை கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தினால் எதிர்வரும் காலங்களில் இக் கவிஞர்களினால் சமர்ப்பிக்கப்படும் கவிதைகளை தொகுத்து ஆண்டு மலராக வெளியீடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .