Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்
மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் கலாபூசணம் எஸ்.எதிர்மன்னசிங்கம் எழுதிய 'சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள்'எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மகுடம் கலை இலக்கிய வட்டம் பௌர்ணமி கலை நிகழ்வின் 15ஆவது தொடர் அமர்வாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கல்வி அமைப்பின் முன்னாள் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ்.தில்லைநடராஜா,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார்,மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஆலோசகரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளருமான செ.யோகராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது,தமிழ்த் தாய் வாழ்த்தினை எ.தர்மினியும் வரவேற்புரையினை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வி.மைக்கல் கொலினும் நூலின் நயவுரையினை கவிக்கோ வெல்லவூர் கோபாலும் நூலின் ஏற்புரையினை நூல் ஆசிரியரும் இணைந்த வட,கிழக்கின் முன்னாள் கலாசார பணிப்பாளருமான கலாபூசணம் எஸ்.எதிர்மன்னசிங்கமும் நிகழ்த்தினர்.
நூலின் முதல் பிரதிநிதியினை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் உபதலைவரும் வர்த்தகருமான எம்.செல்வராசா பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வினை எழுத்தாளரும் ஆசிரியருமான ஆ.கி.பிரான்சிஸ் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



28 minute ago
40 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
51 minute ago
2 hours ago