Sudharshini / 2016 ஜூலை 20 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்
யாழ். தமிழ்ச் சங்கமும் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய தமிழ் மன்றமும் இணைந்து முன்னெடுக்கும் தங்கத்தாத்தா நினைவு விழா, செவ்வாய்க்கிழமை (19) காலை 9 மணிக்கு முத்துத்தம்பி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய அ.பௌநந்தி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.
இன்றைய சமூகத்தை நெறிப்படுத்துவதற்குப் பெரிதும் துணை செய்வது இலக்கியக் கல்வியா? அறிவியல் கல்வியா? என்ற தலைப்பில் முத்துத்தம்பி மகா வித்தியாலய மாணவர் பங்குபற்றும் சொல்லாடு களமும் இடம்பெற்றது. இதற்கு தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் நடுவராகச் செயற்பட்டார்.
இந்நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர் நா.வை.குமரிவேந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


30 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
58 minute ago