Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழத்து கவிஞர்களில் ஒருவரான மாவை வரோதயனின் நினைவு தின நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 5.00 மணிக்கு, இல.121, ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதிக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மு. தயாபரனின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், நினைவுப் பேருரையை 'வெகுஜனக் கருத்துருவாக்கத்தில் ஊடகங்கள்' என்ற தலைப்பில் யோகா இராமமூர்த்தி நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டு மலரான 'புதுவசந்தம்' வெளியிடப்படவுள்ளது. 'புதுவசந்தம்' மலருக்கான அறிமுகவுரையை ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முஷரப் நிகழ்த்தவுள்ளார்.
அதைத் தொடர்ந்து மாவை வரோதயனின் ஆளுமைகளைப் பற்றிய குறும்பேச்சுக்களை லோ.நிலா, க.சயந்தன் மற்றும் கணரூபன் ஆகியோர் நிகழ்த்துவர்.
நிறைவு நிகழ்வாக 'கனியட்டும் புவி நாளை' என்ற தலைப்பிலான கவியரங்கம் இடம்பெறும். சோ.தேவராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கவியரங்கத்தில் தி.அனோஜன், த.வி.ரிஷாங்கன், தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆகியோர் கவியுரைப்பர்.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago