Niroshini / 2016 மே 24 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
ஓய்வு பெற்ற அதிபர் அ.இராசேந்திரம் எழுதிய 'மூதூரில் எனது பணிகளும் பாடுகளும்' என்னும் நூல் வெளியீட்டு விழா மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் சனிக்கழமையன்று (21) இடம்பெற்றது.
மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கலாபூஷணம் மூதூர் முகைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஏ.எஸ்.உபைதுல்லா வரவேற்புரையை நிகழ்த்த, நூல் அறிமுக உரையை ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கிறிஸ்ரி முருகுப் பிள்ளை வழங்கினார். நூல் நயவுரையை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான எம்.எஸ்.அமானுல்லா நிகழ்த்தினார்.
இதன்போது, நூல் முதற்பிரதியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கிறிஸ்ரியன் றோயல் இமானுவேலிடமிருந்து டொக்டர் வி.இருதயநாதன் பெற்றுக்கொண்டார்.
இந்நூல்வெளியீட்டு விழாவில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ண சிங்கம், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளரும் எழுத்தாளருமான எம்.சி.எம்.ஷெரீப் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.



7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025