2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமதி விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளும் நாட்டிய கலாமந்திர் இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளுமான பவதாரணி மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம், கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசேட அதிதிகளாக எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் சென்னை, தரஞ்சனி பரத நாட்டியக் கல்லூரி இயக்குநரும் நிறுவுநருமான ஸ்ரீமதி சோபனா பால்சந்திரா, கொழும்பு சர்வதேச பாடசாலை அதிபர் டி.சி.சண்டேர்ஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .