Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய மற்றும் இலங்கைக் கலைகளை கிராமப்புறங்களில் வளர்க்கும் நோக்கில் 'மலரட்டும் புதுவசந்தம் - 2016' என்ற தொனிப்பொருளிலான இசை, நடன நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மல்லிகை இளைஞர் கழகத்தினர் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தனர்.
இதன்போது,150இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தமது கலை நிகழ்வுகளை அரங்கேற்றியதுடன், பல மாற்றுத்திறனாளிகளின் தமது சிறப்பான கலை நிகழ்வுகளை நிகழ்த்தினர்.
யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .