Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் 'இரா.உதயணன் இக்கிய விருது - 2018' விருது வழங்கலும் தம்பு சிவாவின் பவள விழா மலர் வெளியீடும் “தாயக ஒலி” 40ஆவது சிறப்பு மலர் அறிமுகமும், கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயரசா கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில், தமிழ் வாழ்த்துரையை வைஷாலி யோகராஜனும் வரவேற்புரையை ஐ.இராசரத்தினமும் தொடக்கவுரையை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் வாழ்த்துரையை சைவப்புலவர் சு.செல்லத்துரையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், காவியம், தமிழ் வளர்ச்சி இலக்கியம், அயலகப் படைப்பு, உயர் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
26 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago