2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

முழுமதி கலை நிகழ்வுகள் நாளை

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் முழுமதி கலை நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை  (23) வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூhரியில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் முதன்மை விருந்தினராகவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளன. வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் 2016 க்கு உரிய முதலாவது முழுமதி கலைநிகழ்வுகளே இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .