Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிச்சக்கவர்த்தி கம்பனுக்கு ஆண்டு தோறும் எடுக்கப்படும் கம்பன்விழாவானது, இம்முறை யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்களுக்கு எடுப்பதற்கு அகில இலங்கைக் கம்பன் கழகம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் இலிருந்து 18 ஆம் திகதிவரை நடைபெறும் நடைபெறவுள்ளது.
கம்பன் விழாவானது, நல்லூர் கம்பன் கோட்டம், துர்க்கா மணிமண்டபம் ஆகிய இடங்களில் காலை, மாலை நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளது. இம்முறை 37 ஆவது கம்பன் விழாவினைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை, எமது நாட்டில் மாத்திரமின்றி, தென்னிந்திய, வெளிநாடுகளிலிருந்தும் பல அறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை, பட்டி மன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சிந்தனையரங்கம், சுழலும் சொற்போர், தனியுரை, படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் போன்ற பல சிறப்பான இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
விழா நடைபெறும் மூன்று நாட்களிலும், மண்டப வாயில்களில், கம்பன் கழக வெளியீட்டு நூல்கள், இருவட்டுக்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன. விழாவில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், இல 300 கோயில் வீதி, நல்லூர் என்ற முகவரிக்கு, கல்லூரியின் பெயர், மாணவர்களின் வகுப்பு, என்பவற்றைக் குறிப்பிட்டு எழுதியனுப்புமாறு விழாக்குழுவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அழைப்பிதல் பெற விரும்புவோர், இம்மாத இறுதிக்கு முன்னர் எழுதி அனுப்பிவைத்தால் அழைப்பிதல் அனுப்பிவைக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago