Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இப்படத்தில் இடம்பெற்ற ‘முட்ட கலக்கி’ என்ற துள்ளல் இசைப் பாடல், யூடியூப் தளத்தில் 10 கோடி (100 Million) பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை கென் கருணாஸே எழுதி, பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், கடந்த மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யூத்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்டவர்கள் தற்போது ஓடிடியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .